Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒலிம்பிக் போட்டி – தகவல்கள்

Olympic Symbol

ஒலிம்பிக் பற்றிய முழுத்தகவல்கள் இங்கு ஒரே பதிவில் தொகுக்கப்பட்டுள்ளன .

சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முதன் முதலில் கிரேக்க(Greek) நகரமான ஒலிம்பியாவில் தொடங்கப்பட்டது.

பழங்கால ஒலிம்பிக் போட்டி :

கி.மு 776 முதல் கி.பி 393 வரை ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மவுண்ட் ஒல்ம்பியாவில் இப்போட்டி நடத்தப்பட்டன. இப்போட்டிகள், எத்யேஸ் மன்னர் காலம்வரை நீடித்து வந்தது. ரோமாபுரி ஆட்சியாளர் தியோடோஷயஸ் கி.மு 393ல், ஒலிம்பிக் போட்டியை தடை செய்தார்.

நவீன கால ஒலிம்பிக் போட்டி :

நவீன ஒலிம்பிக் போட்டி கி.பி.1896 ல் தொடங்கப்பட்டன. நவீன ஒலிம்பிக் போட்டியை மறுமலர்ச்சி அடையச் செய்தவர் பியரி டி குபேர்டின்(Pierre de Coubertin) , இவரே நவீன ஒலிம்பிக் போட்டியின் தந்தை என அழைக்கப்படுக்கிறார். முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் பியரி டி குபேர்டின்.

ஒலிம்பிக்கின் தாரக மந்திரம் “Faster, Higher, Stronger (Citius, Altius, Fortius)(லத்தீன் மொழியில் இருந்து)”. உருவாக்கியவர் ஹென்றி டைடொன்(Henri Didon)

ஒலிம்பிக் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

இது கோடை கால ஒலிம்பிக் மற்றும் குளிர் கால ஒலிம்பிக் என இரு முறை நடைபெற்று வந்தது. 1924ல் முதல் குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

முதன் முதலில் பெண்கள் 1900ஆம் ஆண்டு பாரிஸில் கலந்துகொண்டனர். 1992 வரை கோடைகால ஒலிம்பிக் போட்டியும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டன.அதன் பிறகு கோடை கால போட்டி நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் குளிர் கால போட்டி நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் நடத்தப்படும் கோலாகலமான தொடக்க விழா 1908 முதல் ஒவ்வொரு முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக்கில் மராத்தான் போட்டி :

கி.மு 490ல், நடந்த மாரத்தான் போரில் வென்ற வெற்றிச் செய்தியை மராத்தான் நகரிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள ஏதென்ஸுக்கு ஓடி வந்து சொன்ன கிரேக்க வீரர் Pheidippides , ”நாம் வென்றோம்!(We have won)” என்று கூறி, உயிர் துறந்தார். இவருடைய நினைவாக மாரத்தான் என்ற ஓட்டப்பந்தயமும் சேர்க்கப்பட்டது.தற்போது கடைப்பிடிக்கப்படும் 42.195 கி.மீ (26.22மைல்) போட்டித் தொலைவு, 1921ஆம் ஆண்டு International Amateur Athletic Federation (IAAF) என்ற அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது

 

பெண்களுக்கான மாரத்தான் போட்டி 1984 கோடை கால விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுவரை 30 ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. 30வது ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு (2012) லண்டனில் நடைப்பெற்றது. இது வரை 3 முறை ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நகரம் என்ற பெருமை லண்டன் நகரம் பெற்றுள்ளது.

உலகப்போர்களின் காரணமாக 1916,1940 மற்றும் 1944 ஆகிய மூன்று முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை

இந்தியா 1900ல் முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது.இரண்டு பதக்கங்களைப் பெற்றது.

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் மனிதர் :

நார்மன் கில்பேர்ட் பிரிட்சார்டு (Norman Gilbert Pritchard or Norman Trevor) (June 23, 1877 – October 31, 1929) , இவரே இந்தியா சார்பில் போட்டியிட்டவர், முதன் முதலில் இரு வெள்ளி பதக்கங்களும் இந்தியாவிற்கு இவர் மூலமே கிடைத்தது.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி – மேரி லீலா ராவ் (1952 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் பங்கேற்றார்).

நீளம் தாண்டுதலில் தொடர்ந்து நான்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் கார்ல் லூயிஸ்.

ஒலிம்பிக் தீபம் (Olympic Flame) :

Olympic Torch

 

 

ஒலிம்பிக் தீபம் முதன் முதலில் நவீன் ஒலிம்பிக் போட்டியில் 1928 ல் ஆம்ஸெடர்டம்(Amsterdam) ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் தீபம் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் பல மாதங்களுக்கு முன் கிரீக் நாட்டில் ஒலிம்பியாவில் இந்த தீபம் ஏற்றப்பட்டு பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு ஒலிம்க் போட்டி தொடங்கும் நாளன்று ஒலிம்பிக் நடைபெறும்  மைய அரங்கத்திற்கு  கொண்டு செல்லப்படுகிறது.

 

 

 

 

ஒலிம்பிக் கொடி(Olympic Flag) :

Olympic Flag

ஒலிம்பிக் கொடி மொத்தம் ஆறு நிறங்களாலான ஐந்து வளையங்களைக் கொண்டது . அவை ஊதா(blue),மஞசள்(yellow),கறுப்பு(black),பச்சை(green) மற்றும் சிகப்பு(red) ஆகிய நிறங்களும் , அவற்றின் பின்னால் வெள்ளை (white) நிறமும் அமைந்ததாக காணப்படுகிறது . அந்த வளையங்கள் ஐந்து கண்டங்களைக்குறிக்கிறது, அவை ஆப்ரிக்கா, அமெரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா ஆகியவையாகும்.ஒலிம்பிக் சின்னத்தை வடிவமைத்தவர் பியரி டி குபேர்டின்(Pierre de Coubertin) . முதன் முதலில் ஒலிம்பிக் கொடி 1920ல் பறக்கவிடப்பட்டது.

 

ஒலிம்பிக் குழு(International Olympic Committee-IOC):

ஒலிம்பிக் குழு ஜூன் 23,1894 அன்று பியரி டி குபேர்டின் (Pierre de Coubertin) என்பரால் லோசான்(Lausanne)சுவிட்சர்லாந்தில் துவங்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.

ஒலிம்பிக் குழுவின் தலைவர்கள்(President of International Olympic Committee) :

ஒலிம்பிக் குழுவின் முதல் தலைவர் டெமெட்ரியோஸ் விகேலாஸ்(Demetrios Vikelas).தற்போதைய தலைவர் ஜாக்ஸ் ரோஜ்(Jacques Rogge) பதவிக் காலம் 2001 முதல் 2013வரை.பியரி டி குபேர்டின் (Pierre de Coubertin) என்பவரே 29 வருடமாக தலைவர் பதவியில் இருந்தார்.ஹென்றி கொம்டே தி பெய்லெட் லடூர் (Henri, Comte de Baillet-Latour) என்ற ஒலிம்பிக் குழு தலைவர் பதவியில் இருந்த போதே  அலுவலத்தில் உயிர் இழந்தார்.

ஒலிம்பிக் குழுவின் அலுவலக் மொழி பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம்.  பன்னாட்டு ஒலிம்பிக் நடத்திய முதல் ஒலிம்பிக் போட்டி 1896ல் கீரீக்கில் உள்ள ஏதென்ஸ் நகரில் நடைபெற்றதாகும்.

ஒலிம்பிக் தலைவர்களின் பட்டியல் :

2001-2013 ஜாக்ஸ் ரோஜ் (பெல்ஜியம்)
1980-2001 ஜுவான் அந்தோனியோ சமரன்ச்(ஸ்பெயின்)
1972-1980 மைக்கேல் மோரிஸ் (அயர்லாந்து)
1952-1972 ஏவரி பிரண்டேஜ்(அமெரிக்கா)
1946-1952 ஜே சிக்ஃப்ரிட் எட்ச்ட்ரொம் (ஸ்வீடன்)
1925-1942 ஹென்றி டி பைல்லெட்-லட்டூர் (பெல்ஜியம்)
1896-1925 பியர் டி குபேர்டின்(பிரான்ஸ்)
1894-1896 டெமெட்ரியோஸ் விகேலாஸ் (கிரீஸ்)

ஒலிம்பிக் பதக்கங்கள்(Olympic Medals):

Olympic Medals

ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரர்களுக்கு தங்கம் , வெள்ளி , வெண்கலம் பரிசுகள் ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் குழுவால் (International Olympic Committee-IOC) வழங்கப்படுகிறது . ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் முதலில் 1896முதல் வழங்கப்படுகின்றது. 1896 ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பரிசுகள் வழங்கப்பட்டன. 1900 நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிண்ணம் (Cup) மற்றும் கோப்பைகள்(Trophies) வழங்கப்பட்டன.

1904ல் நடைபெற்ற அமெரிக்காவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியிலிருந்து தங்கம் , வெள்ளி , வெண்கலம் பரிசுகள் வழங்கப்பட்டது. ஒலிம்பிக் பதக்கங்கள் ஒலிம்பிக் குழு(International Olympic Committee)வழங்குகிறது.

கிரேக்க கடவுளானநைக்(Nike)” உருவம் பதக்கத்தின் ஒரு புறத்தில் பதிந்திருக்கும்.

ஒலிம்பிக் மாஸ்காட்(Olympic Mascot):

முதன் முதலில் 1968ல் மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலிருந்து அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது.

இது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடுகளின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை குறிக்கும் விதமாக மனிதரோ அல்லது விலங்கோ சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. 1980ல் ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட சின்னம் மிஷா(ரஷ்ய கரடி).

ஒலிம்பிக்கின் முதன்மைகள்(First in Olympics):

நவீன ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம் வென்ற வீரர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் கனோலி(James Connolly). இவருக்கு வெள்ளிப் பதக்கம் தடகளப் போட்டிக்காக கிடைத்தது.

பெண்கள் போட்டியில் முதன் முதலில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை சார்லஸ் கூப்பர்(Charlotte Cooper) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றார்.

மைக்கேல் பெல்ப்ஸ் (Michael Phelps)என்ற நீச்சல் வீரர்  தான் உலகிலேயே அதிக பதக்கங்களை வென்றுள்ளார். அவர் வென்ற பதக்கங்கள் மொத்தம் 22 (18 தங்கம் , 2 வெள்ளி,2 வெண்கலம் ). இரண்டாம் இடத்தை பிடித்த வீராங்கனை லாரிசா லட்டினினா( Larisa Latynina) ஓர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை.அவர் வென்ற பதக்கங்கள் மொத்தம் 18(9 தங்கம் , 5 வெள்ளி,4 வெண்கலம் ).

ஒலிம்பிக்கை முதன் முதலில் ஒளிபரப்பிய  தொலைக்காட்சியின் பெயர் Telefunken and Fernseh(ஜெர்மனி நாட்டை சேர்ந்தது),ஒளிபரப்பிய  ஆண்டு 1936 .

ஒலிம்பிக் நடைபெற்ற இடங்களும் நாடுகளும் :

 

வரிசை

ஆண்டு

கோடை கால ஒலிம்பிக் போட்டி

இடம் நாடுகள்
1 1896 ஏதென்ஸ்(Athens) கிரீஸ்(Greece)
2 1900 பாரிஸ்(Paris) ஃப்ரான்ஸ்(France)
3 1904 செய்ண்ட் லூயிஸ்(St Louis) அமெரிக்கா(US)
4 1908 லண்டன்(London) இங்கிலாந்து(Great Britain)
5 1912 ஸ்டாக்ஹொம்(Stockholm) சுவீடன்(Sweden)
6* 1916 பெர்லின்(Berlin) ஜெர்மனி(Germany)
7 1920 ஆண்ட்வெர்ப்(Antwerp) பெல்ஜியம்(Belgium)
8 1924 பாரிஸ்(Paris) பிரான்சு(France)
9 1928 ஆம்ஸ்டர்டாம்(Amsterdam) நெதர்லாந்து(Netherlands)
10 1932 லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) அமெரிக்கா(US)
11 1936 பெர்லின்(Berlin) ஜெர்மனி(Germany)
12** 1940 டோக்யொ(Tokyo then Helsinki) ஜப்பான் பின் ஃபின்லாந்து(Japan then Finland)
13** 1944 லண்டன்(London) UK(Britain)
14 1948 லண்டன்(London) UK(Britain)
15 1952 ஹெல்சின்கி,(Helsinki) ஃபின்லாந்து(Finland)
16 1956 மெல்போர்ன்(Melbourne) ஆஸ்திரேலியா(Australia)
17 1960 ரோம்(Rome) இத்தாலி(Italy)
18 1964 டோக்கியோ(Tokyo) ஜப்பான்(Japan)
19 1968 மெக்ஸிகோ சிட்டி(Mexico City) மெக்ஸிகோ(Mexico)
20 1972 ம்யூனிச்(Munich) மேற்கு ஜெர்மனி(W. Germany)
21 1976 மாண்ட்ரீல்(Montreal) கனடா(Canada)
22 1980 மாஸ்கோ(Moscow) USSR)
23 1984 லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) அமெரிக்கா(US)
24 1988 சியோல்(Seoul) தென் கொரியா (S. Korea)
25 1992 பார்சிலோனா(Barcelona) ஸ்பெய்ன்(Spain)
26 1996 அட்லாண்டா(Atlanta) அமெரிக்கா(US)
27 2000 சிட்னி(Sydney) ஆஸ்திரேலியா(Australia)
28 2004 ஏதென்ஸ்(Athens) கிரீஸ்(Greece)
29 2008 பெய்ஜிங்(Beijing) சீனா(China)
30 2012 லண்டன்(England)இது வரை லண்டனில் மூன்றுமுறை ஒலிம்பிக் போட்டிநடைபெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது லண்டன் (UK)
31 2016 ரியோ டி ஜனேரோ பிரேசில்

**உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவில்லை.

குளிர்கால ஒலிம்பிக் போட்டி :

குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்த ஆண்டு -1924.

குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்ற இடங்களும் நாடுகளும் :

 

வரிசை

ஆண்டு

குளிர்கால கால ஒலிம்பிக் போட்டி

இடம் நாடுகள்
1 1924  சாமொனிக்ஸ்(Chamonix)  பிரான்ஸ்(France)
2 1928  செயிண்ட் மோரிட்ஸ்(St. Moritz)  ஸ்விட்சர்லாந்து(Switzerland)
)3 1932 ப்ளாசிட் ஏரி(Lake Placid)  ஐக்கிய அமெரிக்கா(United States)
4 1936  கார்மிஷ்ச்(Garmisch-Partenkirchen)  ஜெர்மனி(Germany)
5  1940
இரண்டாம் உலகப்போரின் காரணமாக நடைபெறவில்லை
 ஜெர்மனி(Germany)
6  1944  
இரண்டாம் உலகப்போரின் காரணமாக நடைபெறவில்லை
  இத்தாலி(Italy)
7  1948  செயிண்ட் மொரிட்ஸ்(St. Moritz)  சுவிட்சர்லாந்து(Switzerland)
8  1952  ஆஸ்லோ(Oslo)  நார்வே(Norway)
9  1956  கார்டினா ஆம்பசோ(Cortina d’Ampezzo)  இத்தாலி(Italy)
10  1960  ஸ்குவா வாலே(Squaw Valley)  ஐக்கிய நாடுகள்(United States)
11  1964  இன்ஸ்ப்ரக்(Innsbruck)  ஆஸ்திரியா(Austria)
12  1968  க்ரெனோபில்(Grenoble)  ப்ரான்ஸ்France
13  1972  சாப்ரோ(Sapporo)  ஜப்பான்(Japan)
14  1976  டென்வர்(Denver)  ஆஸ்திரியா(Austria)
15  1980  லேக் ப்லேசிட்(Lake Placid)  ஐக்கிய நாடுகள்(United States)
16  1984  சரஜ்வோ(Sarajevo)  யுகோஸ்லேவியா(Yugoslavia)
17  1988  கால்கரி(Calgary)  கனடா(Canada)
18  1992  அல்பெர்ட்வில்லே(Albertville)  ஃப்ரான்ஸ்(France)
19  1994  லில்லிஹம்மர்(Lillehammer)  Norway
20  1998  நாகனோ(Nagano)  ஜப்பான்(Japan)
21  2002 உப்பு ஏரி நகரம்(Salt Lake City)  ஐக்கிய நாடுகள்(United States)
22  2006 டியூரின்(Turin) இத்தாலி(Italy)
23  2010  வான்கொவெர்(Vancouver,)  கனடா(Canada)
24  2014  சோச்சி(Sochi)  ரஷ்யா(Russia)
25  2018  ப்யொன்சாங்க்(Pyeongchang) தென் கொரியா(South Korea)
26  2022  இன்னும் முடிவு செய்யப்படுவில்லை

இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி:

இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் கோடை கால இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 2010.

முதல் குளிர்கால இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 2012.

இளைஞர் ஒலிம்பிக் நடைபெற்ற இடங்களும் நாடுகளும் :

 

வரிசை

ஆண்டு

இளைஞர் கால ஒலிம்பிக் போட்டி

இடம்/நாடுகள்
1 2010  முதல் கோடை காலப் போட்டி  சிங்கப்பூர்(Singapore)
2 2012  முதல் குளிர் காலப் போட்டி  இன்ஸ்ப்ரக்,ஆஸ்திரியா
)3 2014 இரண்டாம் கோடை காலப் போட்டி  நன்ஜிங்,சீனா(China)
4 2016  இரண்டாம் குளிர் காலப் போட்டி  இன்னும் முடிவு செய்யப்படுவில்லை

ஒலிம்பிக்கில் இந்தியா:

இந்தியா முதல் முறை பங்கேற்பு -1900.ஒலிம்பிக்கில் இந்தியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்ற ஆண்டு 1920.

 

 

இந்திய பதக்கங்கள்போட்டிகள்/ஆண்டுகள் வாரியாக:

ஆண்டு

போட்டி

பதக்கம்

கூடுதல் தகவல்

1900

தடகளப்போட்டி

வெள்ளி-2

1928

ஹாக்கி(Hockey)

தங்கம்-1

ஹாக்கி இறுதிப் போட்டியில் ஹாலந்தை எதிர் கொண்டு 3-0 என்ற நிலையில் இந்தியா தங்கம் வென்றது.இப்போட்டியில் மூன்று கோலை அடித்து இந்திய வெற்றிக்கு வழி வகுத்தவர் தயான் சந்த்(Dhyan Chand). இவரின் பிறந்த தினமே (ஆகஸ்ட் 29) இந்திய தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்பட்டு வருகிறது

1932

ஹாக்கி(Hockey)

தங்கம்-1

ஹாக்கி  இறுதிப் போட்டியில் அமெரிக்காவைஎதிர் கொண்டு 24-1  என்ற நிலையில் அபாரமாக தங்கம் வென்றது

1936

ஹாக்கி(Hockey)

தங்கம்-1

ஹாக்கி  இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர் கொண்டு 8-1  என்ற நிலையில் தங்கம் வென்றது.தயான் சந்த்(Dhyan Chand) அவர்களின் இறுதி ஒலிம்பிக் போட்டியும் இதுவே.

1948

ஹாக்கி(Hockey)

தங்கம்-1

 ஹாக்கி இறுதிப் போட்டியில் லண்டனை எதிர் கொண்டு 4-0  என்ற நிலையில் தங்கம் வென்றது.

1952

ஹாக்கி(Hockey) போட்டியில் தங்கமும், மல்யுத்தம்(Wrestling) போட்டியில் வெண்கலமும் வெற்றி

தங்கம்-1

வெண்கலம்-1

ஹாக்கி இறுதிப் போட்டியில் ஹாலந்தை எதிர் கொண்டு 6-1  என்ற நிலையில் தங்கம் வென்றது.கஷாபா தாதாசாகிப் ஜாதவ்(Khashaba Dadasaheb Jadhav) மல்யுத்தப்போட்டியில் வெண்கலப்பட்டம் வென்றார்.

1956

ஹாக்கி(Hockey)

தங்கம்-1

ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொண்டு 1-0  என்ற நிலையில் தங்கம் வென்றது. இந்தியா இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து 6 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

1960

ஹாக்கி(Hockey)

வெள்ளி -1

ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொண்டு 0-1  என்ற நிலையில் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.

1964

ஹாக்கி(Hockey)

தங்கம்-1

 ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொண்டு 1-0  என்ற நிலையில் வென்று தங்கப் பதக்கம் வென்றது.

1968

ஹாக்கி(Hockey)

வெண்கலம்-1

1972

ஹாக்கி(Hockey)

வெண்கலம்-1

1980

ஹாக்கி(Hockey)

தங்கம்-1

 16 வருடங்களுக்குப் பின்ஸ்பெயினுடன் இறுதிப் போட்டியில்  மோதி 4-3 என்ற புள்ளிகளுடன் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

1996

டென்னிஸ்(Tennis)

வெண்கலம்-1

 லியாடர் பயஸ் வெண்கலப்பதக்கத்தை வென்றார்

2000

பளு தூக்குதல் (Weight Lifting)

வெண்கலம்-1

 பளு தூக்கும் போட்டியில் கர்ணம் மல்லீஸ்வரி (Karnam Malleswari)

2004

துப்பாக்கி சுடுதல்

வெள்ளி -1

2008

துப்பாக்கி சுடுதலில் தங்கமும்,மல்யுத்தம் & குத்துச்சண்டையில்(Boxing) தலா 1 வெண்கலமும் இந்தியா பெற்றது

தங்கம்-1

வெண்கலம்-2

 தனி நபர் போட்டியில்(துப்பாக்கிசுடுதல்) தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் – அபினோ பிந்த்ரா
 2012

துப்பாக்கி சுடுதல்-1 &மல்யுத்தம்( Wrestling)-1

பூப்பந்தாட்டம்(Badminton)-1, குத்துச்சண்டை-1(Boxing),        துப்பாக்கி சுடுதல்-1  &            மல்யுத்தம்-1( Wrestling)

வெள்ளி -2

வெண்கலம் -4

 சர்வதேச ஒலிம்பிக் போட்டி இந்திய பதக்கப்பட்டியலில் 55 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

 

இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus மூலம் பகிர்ந்து உதவவும்.

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.